இங்கிலாந்தின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்படவுள்ள இந்தியா
இங்கிலாந்தின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இந்தியா சேர்க்கப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்தில் குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறிய படகுகள் மூலமாகவும், வேறு வழிகள் மூலமாகவும் வரும் நிலையில், அடைக்கலம் கேட்டால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் புதிய சட்டம்
அத்துடன் அவர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்ய முடியாது. அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
இதேவேளை இந்தியாவுடன் சேர்த்து ஜோர்ஜியா நாட்டையும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து இணைக்க இருக்கின்றது.
"சட்டவிரோாத குடியேற்ற சட்டம் 2023" இன் படி இங்கிலாந்து நாட்டிற்குள் படகுகள் வருவதை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
அண்மைக் காலமாக பல்வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக நுழைந்து, அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்கிறார்கள்.
அவ்வாறு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதைக் கட்டுப்படுத்துவதற்கு இங்கிலாந்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.