ரணில், சஜித்தை இணைக்கும் முயற்சியில் இந்தியா : கொழும்பு அரசியலில் பரபரப்பு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதன்படி பசில் ராஜபக்சவின் செயற்பாட்டின் பிரகாரம் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சிக்கு செல்லவுள்ளதாகவும் அதேவேளையில் நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சஜித் மற்றும் ரணில் விக்ரமசிங்கவை இணைக்கும் நடவடிக்கை
மறுபுறம் சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்கவை இணைக்கும் நடவடிக்கை இந்தியாவில் நடை முறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து சஜித் பிரேமதாச உட்பட பல தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் அடங்கிய தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |