இந்தியாவிடம் வீழ்ந்தது இலங்கை
இலங்கைக்கு எதிரான சுப்பர் 4 சுற்றுப்போட்டியில் இந்திய அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டன.
இலங்கை அணி சார்பில்
இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 22,தனஞ்சய டி சில்வா 41, சுழலில் கலக்கிய டுனித் வெலாகே ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில் இன்றையதினமும் கலக்கிய குல்தீவ் யாதவ் 04,பும்ரா மற்றும் ஜடேஜா இருவரும் தலா02, மற்றும் மொகமட் சிராஜ் , ஹர்திக் பாண்ட்யா இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்தியாவிற்கு சவாலாகிய இலங்கை: இறுதியில் வெற்றி பெறுமா...
இலங்கைக்கு எதிரான இந்தியாவின் ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டி மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஆரம்பமாகியது.
இந்தப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகியது.
இப்போட்டியில் இந்திய அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.
சகல விக்கெட்டுகளும் இழப்பு
இந்தியா 49 ஓவர்கள் முடிவில் 213 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்து வீச்சில் துனித் வெல்லாளகே ஐந்து விக்கெட்டுகளையும் சரித் அசலங்கா நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தற்போது 214 எனும் வெற்றியிலக்கை நோக்கி இலங்கை துடுப்பெடுத்தாடி வருகிறது.