சீன எல்லைப் பகுதியில் போர்த்தளபாடங்களை குவிக்கும் இந்தியா
india
china
border
war-materials
By Sumithiran
அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட நவீன ஆயுதங்கள், போர்த் தளபாடங்களைச் சீனாவுடனான எல்லைப் பகுதியில் உள்ள இராணுவ நிலைகளுக்கு இந்தியா கொண்டுசென்றுள்ளது.
கிழக்கு லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், அருணாசலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளிலும் சீனா படையினரைக் குவித்து வருகிறது.
சீனப் படையின் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில் படை வலிமையை அதிகரிக்க இந்தியாவும் அமெரிக்காவிடம் வாங்கிய சினூக் ஹெலிகொப்டர்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை எல்லைப் பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளது.
இதேபோல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஒலியைவிட அதிவேகத்தில் செல்லும் ஏவுகணைகள், நவீன கண்காணிப்புக் கருவிகள் ஆகியவற்றையும் எல்லைப் பகுதிக்கு கொண்டுசென்றுள்ளது.