எதிர்பார்ப்புடன் களமிறங்கும் இந்தியா! வரலாற்றை மாற்றி அமைக்குமா மேற்கு இந்திய தீவுகள்...
இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் இன்று ஆரம்பிக்கவுள்ளது.
மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து ரி - 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படும் நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் இன்று (07.30 மணிக்கு) ஆரம்பிக்கவுள்ளது.
இந்தத் தொடர் 3ஆவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்

இந்தியா : சுப்மன் கில், ரோகித் சர்மா (கப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரஹானே, கே.எஸ்.பரத் அல்லது இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், உனட்கட் அல்லது முகேஷ்குமார் அல்லது நவ்தீப் சைனி.
மேற்கு இந்திய தீவுகள்: கிரேக் பிராத்வெய்ட் (கப்டன்), தேஜ்நரின் சந்தர்பால், ரேமன் ரீபர், ஜெர்மைன் பிளாக்வுட், கிர்க் மெக்கென்சி, ஜோஷூவா டா சில்வா, அலிக் அதானேஷ், ஜசோன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கெமார் ரோச் அல்லது ஷனோன் கேப்ரியல், ரகீம் கார்ன்வால்.
கடந்த 21 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக, ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இந்திய அணி தோல்வி அடைந்தது கிடையாது என்பதோடு, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குப் பின் இந்தியா களமிறங்கும் முதல் போட்டி என்பதால், எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.