இந்தியா பதிலடி கொடுக்கும்..! அமெரிக்காவில் எதிரொலித்த குரல்
ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு, பரந்த பிராந்திய மோதலை தவிர்க்கும் வகையில், இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார்.
அத்துடன், பஹல்காமில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வேட்டையாட இந்தியாவுடன் பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பதிலடி
“இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பரந்த பிராந்திய மோதலுக்கு வழிவகுக்காத வகையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை.
வெளிப்படையாகச் சொன்னால், பாகிஸ்தான், தங்கள் பிரதேசத்தில் செயல்படும் பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டு, கையாளப்படுவதை உறுதிசெய்ய இந்தியாவுடன் ஒத்துழைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என அவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த கொடிய தாக்குதல் நடந்தபோது வான்ஸ் தனது குடும்பத்தினருடன் இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்தார்.
அமெரிக்காவின் ஆதரவு
கடந்த மாதம், அவர் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து பயங்கரவாத தாக்குதலை கடுமையாகக் கண்டித்ததோடு, உயிர் இழப்புக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருந்தார்.
அத்துடன், பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் அமெரிக்கா இந்திய மக்களுடன் நிற்கிறது என்றும், அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
