தென்னிந்திய இசை மேடையில் வெளிநாடொன்றிலிருந்து ஒலிக்கும் மற்றுமொரு ஈழத்துக் குரல்!
தென்னிந்தியாவின் பிரபல தமிழ்த் தொலைக்காட்சியொன்றில் நடைபெறும் இசைநிகழ்ச்சியில் ஈழத்து வம்சாவழியைச் சேர்ந்த பெண் ஒருவர் பங்குபற்றியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இருந்து கலந்து கொண்ட சாரங்கா சிறந்த பாராட்டுக்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை தெரிவுசெய்யும் சுற்று இடம்பெற்றது.
நடுவர்களிடம் பாராட்டுக்கள்
அதன்படி, இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமக்கான மேடையை பெற்றுக்கொள்வதற்காக பலரும் கலந்துகொண்டிருந்த நிலையில் இலங்கையிலிருந்தும், ஈழத்து வம்சத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இரண்டு போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அதில் நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற தெரிவுச்சுற்றில் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து ஈழத்து வம்சாவழியைச் சேர்ந்த சாரங்கா கலந்துகொண்டிருந்தார்.
இவர், பாடிய பாடலின் வாயிலாக அனைத்து நடுவர்களிடமும் பாராட்டுக்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |