இலங்கை வரும் இந்திய இராணுவத் தளபதி - பாதுகாப்பு ஒத்துழைப்பில் மைல்கல்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கூட்டுப் பயிற்சியான ‘மித்ரா சக்தி’யை கண்காணிக்க அவர் இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.
குறித்த விடயத்தை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை பாதுகாப்பு
இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட இராணுவ ஈடுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பரஸ்பர நம்பிக்கை, மூலோபாய சீரமைப்பு மற்றும் வளர்ந்து வரும் செயல்பாடுகள் ஆகியவற்றை இந்த பயணம் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவரது விஜயம் இலங்கையுடனான கூட்டாண்மை, ஸ்திரத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை வலியுறுத்துவதன் மூலம் இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை" கொள்கையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
அந்தவகையில், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு இரண்டு நாள் பயணமாக வரவுள்ளார். இந்த பயணம் எதிர்வரும் டிசம்பர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் அமையவுள்ளது.
இது இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.