கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கைதான இந்திய பிரஜை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமாக குஷ் ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (20.04.2026) மாலை குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடைய இந்தியப் பிரஜை என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பொருட்கள் ஏதுமற்ற பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி வழியாக வெளியேற முயன்ற போதே அங்கிருந்த சுங்க அதிகாரிகள் சந்தேக நபரை மறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த நபரின் கைவசமிருந்த பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 கிலோகிராம் 68 கிராம் குஷ் ரக போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னைடுத்து வருகின்றனர்.
துர்நாற்றம் வீசும் பெட்டிகள் - துருப்பிடித்த கழிவறைகள்: திருகோணமலை - கல் ஓயா தொடருந்து சேவையின் மோசமான நிலை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |