இலங்கை தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
நெருக்கடியால் பாதிக்கப்படுள்ள அண்டை நாடான இலங்கைக்கு முடியுமான அளவு உதவ முயற்சிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனை கொல்கத்தாவில் வைத்து தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷிடம் கற்க வேண்டும்
இலங்கையில் தற்போது பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளது.பங்களாதேஷ் இன்று சிறந்த பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. எனவே அந்த நாட்டிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இந்தநிலையில் இலங்கை பண வீக்கம் காரணமாக,அத்தியாவாசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டை எதிர்கொள்கிறது என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் எழும் சவால்களை எதிர்கொள்ள, இலங்கை மக்களுக்கு உதவுவதில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கையில் உள்ள உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
முன்னோக்கிச் செல்லும்போது, இலங்கை மக்களுடன் இந்தியாவின் ஆதரவும் ஒற்றுமையும் தொடரும்" என்று அது மேலும் கூறியுள்ளது.
இந்தியஉயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கு இந்தியா அவசரமாகப் பதிலளித்ததுடன், 2022 ஆம் ஆண்டில் சுமார் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை துரிதமாக இறுதிசெய்து வழங்கியதாகவும் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
நாணய பரிமாற்றம், இலங்கையின் கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைத்தல்,
எரிபொருள், உணவு, மருந்துகள், உரங்கள், 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு
மேல் கடன் உதவி, மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் என்பன இந்த உதவிகளில்
அடங்கி இருந்ததாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
