சாமி பட பிரபல வில்லன் நடிகர் காலமானார்
தென்னிந்திய வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
83 வயதுடைய இவர் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் இன்று (13.07.2025) அதிகாலை 4 மணியளவில் காலமானார்.
நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட நடிகர் கோட்டா சீனிவாச ராவ், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.
சிகிச்சை பலன் அளிக்காமல்
2003ம் ஆண்டு வெளியான சாமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அத்துடன் இவர் 1999 - 2004 ஆம் ஆண்டு வரை ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக, உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்று (ஜூலை 13) அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.
மேலும் இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதுடன் அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

