இலங்கை கடற்பரப்பில் மீண்டும் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்
arrest
jaffna
india fisherman
srilanka navy
By Sumithiran
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் மூவர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூன்று கடற்றொழிலாளர்கள் படகொன்றில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போதே சிறிலங்கா கடற்படையினர் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
மூன்று கடற்றொழிலாளர்களையும் படகையும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்த கடற்படையினர் , மீனவர்களை நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி