இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர்கள் (Indian Fisherman) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் (Jaffna)- நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (08) அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
இதன்போது மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்தல்
இந்த நிலையில் கைதான கடற்றொழிலாளர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 537 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 67 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்