தமிழ் தேசியத்துக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் மக்களுமே...
வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழரசுக் கட்சியின் (ITAK) 8 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருப்பதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி வாக்களித்த மக்களுமே என மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கயைில், வடக்கு கிழக்கில் காலங்காலமாக தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்துடன் நின்றவர்கள் இன்று விலகல் போக்கை காட்டுகின்றது என்பதே சர்வதேசத்தின் பார்வையாக உள்ளது.
தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட எல்லை கடந்த பிளவுகள், முரண்பாடுகள் குறிப்பாக சுயேட்சைக் குழுக்கள் என்பவற்றால் தான் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது.
அத்துடன் 20 சதவீதமான மக்கள் காலாகாலமாக தமிழ் தேசியத்திற்கு எதிராக வாக்களிக்கின்றார்கள். இது ஒரு சாபக்கேடு.” என தெரிவித்து்ளளார்.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |