தேசிய இனப்பிரச்சினைக்கான அநுர அரசின் தீர்மானம்! சிறிநேசன் எம்.பி பகிரங்கம்

Batticaloa Anura Kumara Dissanayaka Sri Lanka Gnanamuththu Srineshan
By Harrish Dec 08, 2024 10:00 AM GMT
Report

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஒரு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த அநுர அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்(Gnanamuttu Sirinesan) தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் பின்னர் சிறீதரன் தலைமையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு கூறியதாக சிறிநேசன் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(08.12.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல்: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்

ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல்: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்

தேசிய இனப்பிரச்சினை

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “இதன் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்.

அதில் முதலாவதாக தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தை நியாயமான அடிப்படையில் மிகவும் விரைவாக தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தோம்.

தேசிய இனப்பிரச்சினைக்கான அநுர அரசின் தீர்மானம்! சிறிநேசன் எம்.பி பகிரங்கம் | Newpolitical Change The Solve Ethnic Problem Anura

அத்துடன் இராணுவத்தினராலும், குடியேறிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற காணிகள் விடுவிப்பு விடயம் தெரிவிக்கப்பட்டது.

அதில் முக்கியமாக மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைக் காணி தொடர்பில் வலியுறுத்தியிருந்தோம்.

நீதிமன்றத்தின் கட்டளைகளை மீறி இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதுடன், கால்நடைகளும் மேய்ச்சற்தரையில்லாத நிலையில் அவஸ்தைக்குள்ளாகியுள்ளமை பற்றித் தெளிவுபடுத்தியுள்ளோம். 

50 வருட ஆட்சி! தப்பி ஓடிய சிரியா ஜனாதிபதி - கிளர்ச்சியாளர்களின் வெற்றி

50 வருட ஆட்சி! தப்பி ஓடிய சிரியா ஜனாதிபதி - கிளர்ச்சியாளர்களின் வெற்றி

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுவதுடன், அதனூடாகக் கைது செய்யப்பட்டுள்ள அரசியற் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பிலும் தெரியப்படுத்தினோம்.

தேசிய இனப்பிரச்சினைக்கான அநுர அரசின் தீர்மானம்! சிறிநேசன் எம்.பி பகிரங்கம் | Newpolitical Change The Solve Ethnic Problem Anura

அதுமட்டுமல்லாது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மூலமாக கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயமும், திருக்கோவில் ஆதார வைத்தியசாலை தரமுயர்த்தல் தொடர்பான விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறு பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் எம்மால் சொல்லப்பட்டதுடன், வடக்கு - கிழக்கில் அபிவிருத்தி குன்றிக் காணப்படும் விடயம் பற்றியும் கூறியிருந்தோம். இதன் நிமித்தம் விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.

அரிசி பிரச்சினைக்கு முற்று: மக்களுக்கு வெளிவந்துள்ள நற்செய்தி

அரிசி பிரச்சினைக்கு முற்று: மக்களுக்கு வெளிவந்துள்ள நற்செய்தி

புதிய அரசியல் மாற்றம்

இவ்விடயங்களை ஜனாதிபதி நுணுக்கமாகவும், அவதானமாகவும் செவிமடுத்தார். இதில் இனப்பிரச்சினை தீர்வு என்ற விடயத்தில் அவர்கள் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறியிருக்கின்றார்கள்.

அந்த திருத்தம் வரும்போது எம்மால் குறிப்பிட்ட விடயங்களையும் கவனத்திற் கொள்வதோடு தென்னிலங்கை மக்களும் இந்த விடயத்தில் குழப்பம் அடையாத விதத்தில் இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

தேசிய இனப்பிரச்சினைக்கான அநுர அரசின் தீர்மானம்! சிறிநேசன் எம்.பி பகிரங்கம் | Newpolitical Change The Solve Ethnic Problem Anura

எவ்வாறாக இருப்பினும் கடந்த காலங்களில் நாங்கள் தென்னிலங்கைத் தலைவர்களிடம் எமது இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஏமாற்றப்பட்டிருந்தோம்.

எனவே இவரும் ஒரு தென்னிலங்கைத் தலைவர் என்ற அடிப்படையில் இதற்கான செயற்பாடுகள் இடம்பெறும்போது தான் ஒரு நம்பகத்தன்மையை உணர முடியும்.” என அவர் தெரிவித்துள்ளார்.         

தமிழர் பகுதியில் நடந்த வாள்வெட்டு சம்பவம்! காவல்துறையிடம் சிக்கிய ஐவர்

தமிழர் பகுதியில் நடந்த வாள்வெட்டு சம்பவம்! காவல்துறையிடம் சிக்கிய ஐவர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025