இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் நேற்று புதன்கிழமை(23) மாலை கைது செய்யப்பட்ட 09 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி (06-08-2026) வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை(22) காலை மீன்பிடிக்க இழுவைப் படகு ஒன்றில் 9 கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்ற நிலையில் நேற்று புதன்கிழமை (22) மாலை இலங்கை கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்
கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினர் குறித்த கடற்றொழிலாளர்களை விசாரணைகளின் பின்னர் இன்று வியாழக்கிழமை(23) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை இன்றைய தினம் வியாழக்கிழமை (23) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
நீதவானின் உத்தரவு
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 16 மணி நேரம் முன்