பொல்லுகள், குண்டுகளுடன் களமிறங்கினர் இந்திய மீனவர்கள்
By Vanan
யாழ். வடமராட்சி - பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினமும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முனைப்பகுதி மீனவர்களின் 4 வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மீனவரது படகு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் இழுவைப் படகிலிருந்து கற்கள், பொல்லுகள் ஈயக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நேற்றைய தினம் இலங்கை கடற்படையினரால் 6 படகுகளும் 43 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையிலும் கூட, பருத்தித்துறை பகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்து சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி