இலங்கை கடல்வளத்தை சூறையாடும் இந்திய கடற்றொழிலாளர்கள்
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இலங்கை கடற்றொழிலாளர்கள் தொழில்களை இழப்பதுடன் வேறு தொழில்களுக்கு நாடிச் செல்ல வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையினால் மீன்வளம் அழிவடைவதுடன் வடக்கில் அரைவாசி கடற்றொழிலாளர் சமூகம் அழிவடைந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடனேயே சட்டவிரோத கடற்றொழில் இடம்பெறுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைமடி படகுகளால் இலங்கைக் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிப் பேசுகின்றது “கடசி மீனவன்“ என்ற இந்த ஆவணப்படம்....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |