அத்துமீறிய கடற்றொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு (படங்கள்)
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 12பேரின் விளக்கமறியலை நவம்பர் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவு அருகே இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மூன்று படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கடந்த ஒக்டோபர் மாதம் (14)ஆம் திகதி கைது செய்தனர்.
விளக்கமறியல் நீடிப்பு
கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றில் ஒக்டோபர் (15)ம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்டபோது இன்று(27) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு விசாரணை இன்று
நீதவான் கஜநிதிபாலன் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது 12 மீனவர்களின் விளக்கமறியலையும் எதிர்வரும் நவம்பர்( 8)ம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.