இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: சிறீதரன் எடுக்கவுள்ள நடவடிக்கை

Indian fishermen S. Sritharan Sri Lanka Fisherman
By Jaso Apr 03, 2025 12:14 AM GMT
Report

ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் குறித்து இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் அழுத்தம் கொடுப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (srithaan)தெரிவித்துள்ளார்.

 நெடுந்தீவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

 ஈழத்தமிழரின் பொருளாதாரத்தை அழித்த இந்திய கடற்றொழிலாளர்கள்

இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையால் இதுவரையில் ஈழத்தமிழர்களின் பொருளாதாரத்தை அரைவாசி அழித்துவிட்டது. தமது பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ள முடியாத நிலையிலும் இயல்பு வாழ்க்கையை இழந்த நிலையிலும் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.

குறிப்பாக யுத்தம் முடிவடைந்த 15 ஆண்டுகளில் வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரம் பெரியளவில் அழிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அடிப்படைக் காரணமே இந்திய கடற்றொழிலாளர்களின் வருகைதான்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: சிறீதரன் எடுக்கவுள்ள நடவடிக்கை | Indian Fishermens Encroachment

அவரக்ளுடைய மீன்பிடிப் பொறிமுறைகள் எமது பகுதி மக்களின் மீன்பிடி வலைகளை அறுத்தல் மற்றும் அவர்களது உற்பத்திகளை முடக்குதல் ஆகியவை காரணமாக கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் மேலும் அவர்களது வாழ்வாதாரங்களை அளிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்கின்றது.

இந்தியாவில் இரவு நேரம் போர் விமானம் வெடித்து சிதறியதால் பரபரப்பு

இந்தியாவில் இரவு நேரம் போர் விமானம் வெடித்து சிதறியதால் பரபரப்பு

அழுத்தம் கொடுக்க போகின்றேன்

இது தொடர்பாக நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல கடற்றொழிலாளர்கள் என்னிடம் முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, முன்பெல்லாம் வாரத்தில் ஓரிரு நாட்களில் மட்டுமே இந்திய கடற்றொழிலாளர்கள் வருவார்கள் இடைப்பட்ட நாட்களில் எமது வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.

இப்பொழுது அதற்கு கூட வழியில்லாமல் உணவுக்காக கூட நாம் கஷ்டப்படுகிறோம் என நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் முறையிட்டுள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: சிறீதரன் எடுக்கவுள்ள நடவடிக்கை | Indian Fishermens Encroachment

எனவே இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தரப்பிடம் நான் எடுத்து செல்லவும் இந்தியத்தரப்பிடம் எமது மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து தீர்வு காண்பதற்கான அழுத்தம் கொடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

பாழடைந்த வீட்டில் மனிதபாவனைக்கு உதவாத வகையில் உணவு தயாரிப்பு : தமிழர் பகுதியில் சம்பவம்

பாழடைந்த வீட்டில் மனிதபாவனைக்கு உதவாத வகையில் உணவு தயாரிப்பு : தமிழர் பகுதியில் சம்பவம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016