பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது
india
sri lanka
boat
navy
fisher man
By Vanan
யாழ். வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பில் இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவுவேளை அத்துமீறி இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இரண்டு படகுகள் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அப்பகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக நேற்று முதல் போராட்டங்களை முன்னெடுத்து வரும்நிலையில் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
