அவசர அவசரமாக ரணிலை சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று இடம்டபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளின் பேரில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு 7, 5வது பாதையில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
புது டில்லிக்கு அறிக்கை
சந்திப்பில் உலக அரசியல் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நேபாளத்தில் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மை குறித்து ரணில் விக்ரமசிங்க தனது நிலைப்பாட்டை இந்திய உயர் ஸ்தானிகரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடல் குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் புது டில்லிக்கு அறிக்கை அளிக்க உள்ளார் என்றும் அறியப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
