அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் 'பச்சை கொடி'!
Douglas Devananda
Dr. S. Jaishankar
Sri Lanka
India
By Sumithiran
வடக்கிற்கு அத்தியாவசிய பொருட்கள்
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை காங்கேசன் துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்து வருவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.
டக்ளஸ் -ஜெயசங்கர் பேச்சு
தொலைபேசி ஊடாக இன்று இடம்பெற்ற, இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர், கடற்றொழில் அமைச்சரின் குறித்த முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி