வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் தடை செய்யப்பட்ட விடயம்
சுற்றுலாவுக்காக இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை ஓட்ட அனுமதி வழங்க முடியாது என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஏனெனில் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களில் முச்சக்கர வண்டி வகை சேர்க்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் சொந்த நாட்டின் ஓட்டுநர் உரிமத்தின் அடிப்படையில் இலகுரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதற்கு தற்காலிக உரிமங்களை வழங்குவதற்கான ஒரு முறைமை உள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஓட்டுநர் உரிமம்
இந்த சேவையை விரைவுபடுத்துவதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு சிறப்பு கவுண்டரை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், நீண்ட கால விசாக்களில் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினர் நடைமுறை ஓட்டுநர் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பிறகு இலங்கை ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

மட்டக்களப்பு புலனாய்வு கோப்பில் இருந்து நீக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தகவல்கள்: சி.ஐ.டி அறிக்கை அதிர்ச்சி தகவல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
