கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சுகன்யா கப்பல் உத்தியோகபூர்வ பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்தில் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலை வரவேற்றனர்.
நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு ஐஎன்எஸ் சுகன்யா (INS SUKANYA) கப்பல் பயணிக்கவுள்ளது.
சுற்றுலாத் தலங்களைப் பார்வை
101 மீற்றர் நீளம் கொண்ட ஐஎன்எஸ் சுகன்யா கப்பலின் கட்டளையிடும் அதிகாரியாக கொமாண்டர் சந்தோஷ் குமார் வர்மா செயற்படுகின்றார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இராணுவ உறவுகளை மேம்படுத்தும் நோக்கமான இந்த பயணம் அமையப்பெற்றுள்ளது.
ஐஎன்எஸ் சுகன்யாவின் குழுவினர் இலங்கை கடற்படையுடன் நல்லெண்ணப் பணிகளில் பங்கேற்கவும், தீவு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் சுகன்யா கப்பல் அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டுநவம்பர் 21 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |