ஆபத்திலிருந்த இலங்கை கடற்றொழிலாளர்களை மீட்ட இந்திய கடற்படையினர்
இலங்கை கடற்றொழில் படகில் ஆபத்தில் சிக்கியிருந்த நான்கு கடற்றொழிலாளர்களை இந்திய கடற்படை (India Navy) அதிகாரிகள் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் கிழக்கு கடற்கரையில் பருத்தித்துறையில் (Pointpedro) இருந்து சுமார் 447 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த உள்ளூர் கடற்றொழில் இழுவைப்படகானது இம்மாதம் 07ஆம் திகதி பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து 04 கடற்றொழிலாளர்களுடன் தொழிலுக்காக புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் மீட்பு
இதற்கு முன்னதாக, குறித்த இழுவை படகு ஆபத்தில் உள்ளதாக வடக்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஆர்சிசி (MRCC) என்ற இரண்டு நாடுகளினதும் கடல் மீட்பு ஒத்துழைப்பு மையத்தை தொடர்புகொண்டு அறிவித்தது.

இதனையடுத்து இலங்கையின் கடற்படை, சென்னையின் (Chennai) உதவியை நாடிய நிலையில் சென்னையில் இயங்கும் கடல் மீட்பு ஒத்துழைப்பு மையம், கடற்றொழிலாளர்களை மீட்டு இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |