தமிழர்களை வேட்டையாடிய இந்திய அமைதிப் படையின் யுத்தத்தாங்கிகள்!
1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் போராட்டம் வெடித்தது.
இந்நிலையில், இதனை சமாதானப்படுத்தும் நோக்கில், 1987ஆம் ஆண்டு இலங்கை–இந்திய ஒப்பந்தம் என்ற உடன்பாட்டை அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன மற்றும் அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
குறித்த ஒப்பந்தத்தின் படி, இந்தியா இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியது. இலங்கையின் வடக்கு –கிழக்கில் அமைதி நிலை ஏற்படுத்துவது மற்றும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இராணுவ உதவி வழங்குவது போன்றவையே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்திய அமைதிப்படை
ஒப்பந்தத்தின் ஆரம்பத்தில் இந்திய படைகள் அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பப்பட்டாலும் கூட அதனைத் தொடர்ந்து எதிர்மாறான விளைவுகள் உருவெடுக்க ஆரம்பித்தன.

குறித்த நடவடிக்கை இலங்கை–இந்திய உறவுகளிலும், தமிழீழ அரசியலிலும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு மறைமுக ஆதரவு வழங்கியது.
இந்தியப் படைகள் “அமைதிப்படை” என்ற பெயரில் இலங்கைக்குள் வந்தாலும், அவர்கள் நடத்திய நடவடிக்கைகளால் பொதுமக்கள் பலர் உயிரிழந்ததுடன் சொத்துக்கள் சேதமடைந்தன. இந்திய அமைதிப்படையின் இத்தகைய செயல்களால் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவை எதிரியாகக் கருதியது.
எவ்வாறாயினும், ஈழத்தமிழர் பிரச்சினை இந்திய அரசியல், முக்கியமாக தமிழ்நாட்டு அரசியலில் இன்னுமும் முக்கியமான பிரச்சினையாக தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது தொடர்பில் மேலும் ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அவலங்களின் அத்தியாயங்கள்..........
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 6 மணி நேரம் முன்