இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.
இந்த நிலையில், அங்கு இந்தியப் பிரதமருக்கான வரவேற்பு நிகழ்வுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, இது அவர் நாட்டிற்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயமாகும், இந்த விஜயத்தின் போது பல இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளன.
வீதிகள் முடக்கம்
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினரும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மோடியின் வருகையை முன்னிட்டு, அநுராதபுரம் நகரின் முக்கிய சாலைகள், ஜெய ஸ்ரீ மகா போதி மற்றும் அநுராதபுரம் தொடருந்து நிலையம் ஆகியவை நாளை காலை 7.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மூடப்படும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் சாலை இன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை பல சந்தர்ப்பங்களில் மூடப்படும் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
வரவேற்பு விழா
அத்தோடு, இந்தியப் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா நாளை (05) காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும், இருதரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்போது, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படும்.
முக்கிய நிகழ்வுகள்
120 மெகாவாட் திறன் கொண்ட சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவதில் இந்தியப் பிரதமரும் கலந்து கொள்ள உள்ளார்.
5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தம்புள்ளை விவசாய சேமிப்பு வளாகம், இந்தியாவிலிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவையும் இந்த விஜயத்தின் போது திறந்து வைக்கப்படும்.
மேலும், இந்தியப் பிரதமர், அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு நடத்துவதோடு, இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாகக் கட்டப்பட்ட மகாவ-அநுராதபுரம் தொடருந்து சமிக்ஞை அமைப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட மகாவ-ஓமந்த தொடர்ந்து பாதையையும் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்க உள்ளார்.
பின்னர் இந்தியப் பிரதமர் நாளை (06) மறுநாள் பிற்பகல் இலங்கைக்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டுப் புறப்பட உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்