ஆசியாவின் வலுவான நாணயமாக இந்திய ரூபாய் - பின்னணியில் உள்ள காரணி
இந்திய ரூபாய் நவம்பர் மாதத்தில் ஆசியாவின் சிறந்த பெறுபேற்றைக் கொண்ட நாணயமாக உருவெடுத்துள்ளது.
அந்தவகையில் இந்திய ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக சுமார் 2 சதவீதம் மதிப்புயர்வைப் பதிவு செய்துள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமை மற்றும் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்தமை ஆகியவை இந்த மதிப்புயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எண்ணெய் விலைகள்
இதற்கமைய, கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அதிகபட்ச மதிப்பை இந்திய ரூபாய் எட்டியுள்ளது.

இதற்கிடையில், இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த புதன்கிழமை ஒரு அமெரிக்க டொலருக்கு எதிராக 328.33 ரூபாய் கொள்வனவு விலையாகவும், 337.23 ரூபாய் விற்பனை விலையாகவும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாணயங்களின் பெறுமதியில் ஒப்பீட்டளவில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் குறைந்த எண்ணெய் விலைகள் இந்திய ரூபாய்க்கு மேலும் ஆதரவளிக்கக்கூடும் எனச் சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |