இந்தியாவின் பிராந்தியமாக இலங்கை - குறிவைக்கப்படும் தமிழர் தேசம்..!
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைப் பயன்படுத்தி, இலங்கையை தமது நாட்டின் பிராந்தியமாக இந்தியா மாற்றும் நிலைமை உருவாகும் என உத்தர லங்கா கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த ஆபத்தை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடுத்து அமெரிக்கா வகுத்துள்ள மூலோபாயங்களை முன்கொண்டுசெல்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் உத்தர லங்கா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையின் முதலீட்டு சந்தைக்குள் இந்திய ரூபாவை கொண்டுவர இந்தியா பார்த்துக்கொண்டிருக்கின்றது.
இந்தியாவின் பிராந்தியமாக இலங்கை
ஒருவர் கடையொன்றில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது இந்திய ரூபாயிலும் இலங்கை ரூபாயிலும் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
அவ்வாறெனின் இலங்கை ரூபாவில் விலை இவ்வளவு, இந்திய ரூபாவில் விலை இவ்வளவு என போட வேண்டி ஏற்படும்.நேபாளத்தில் இவ்வாறான நடைமுறை காணப்படுகின்றது.
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைய, வீழ்ச்சி அடைய, இந்திய ரூபா நாட்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும்.யாழ்ப்பாண கடைகளில் கொடுக்கல் வாங்கல்களுக்கு இந்திய ரூபா பயன்படுத்தப்படுகின்றது.
அது சட்டரீதியானது அல்ல. எனினும் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றது.இலங்கை ரூபா வீழ்ச்சி அடைந்து செல்லும் போது, இந்திய ரூபாவின் பயன்பாடு நடைமுறைக்குவரும்.இலங்கையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தும் பணமாக இந்திய ரூபா மாறிய பின்னர், இலங்கை ரூபா காணாமல் போய்விடும்.
அதன்பின்னர் இலங்கை மற்றும் இந்திய சுங்கங்கள் ஒன்றாக இணைக்கப்படும். ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் என்ன நடக்கும். இந்திய ரூபாவும் பயன்பாட்டில் இருக்கும், வரியும் செலுத்தப்படாமல் போகும் பட்சத்தில் பொருளாதார ரீதியாக இந்தியாவின் பிராந்தியமாக மாறிவிடும். அதிபர் ரணில் விக்ரமசிங்க இதற்கு பதிலை தேடுகின்றாரா?
எதிர்காலத்தில் நடைபெறப் போகும் விடயங்களை கருத்தில் கொண்டு அது நடைபெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றாரா?அவரிடம் எந்தவொரு பதிலும் இல்லை.
வெளிநாட்டுப் பயணங்களையே அவர் மேற்கொள்கின்றார்.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதை விடுத்து, கடும்போக்குவாதிகளான சுமந்திரன் தலைமையிலான கும்பலை மகிழ்ச்சிப்படுத்தும் நடவடிக்கையில் ரணில் விக்ரமசிங்க ஈடுபடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
