தாஜ் சமுத்திரா வசமாகும் நுவரெலியா தபால் நிலையம்
நுவரெலிய தபால் நிலையம் அமைந்துள்ள இடத்தை தாஜ் சமுத்திரா சுற்றுலா விடுதிக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதிபர் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் நுவரெலியா தபால் அலுவலகம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அபிவிருத்தியும் பொருளாதார நெருக்கடியும்
“நுவரெலியாவிலுள்ள குறித்த தபால் நிலையம் பராமரிக்க முடியாத நிலையில் உள்ளது.
நாடு தற்போதைய பொருளாதார நிலைமைகளுடன் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதென்பது முடியாத காரியமாகும்.
இலங்கையின் முன்னணி சுற்றுலா விடுதிகளில் ஒன்றான தாஜ் சமுத்திராவினால், சுற்றுலா விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக குறித்த அஞ்சல் நிலைய கட்டடம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நானும் இந்த யோசனையை வரவேற்கின்றேன்.” என்றார்.