தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் அதிபரின் விசேட உரை
Election Commission of Sri Lanka
Ranil Wickremesinghe
Election
By Beulah
தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாளை (8) நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார்.
தேர்தல் முறை திருத்தம் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமையும் பட்சத்தில் எதிர்வரும் முதலாவது தேசிய தேர்தலை புதிய முறைமையின் கீழ் நடத்த முடியுமா என்பதை கண்டறியுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆணைக்குழு நியமனம்
“ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் அதிபர் இந்த ஆணைக்குழுவை நியமித்ததுடன், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
புதிய முறைமை தொடர்பான வரைபை ஆறு மாத குறுகிய காலத்திற்குள் தயாரிக்குமாறு அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி