25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 5.5 லட்சம்.. வெளிநாடொன்றில் தமிழருக்கு அடித்த ஜாக்பாட்
தமிழ்நாட்டின் ஆம்பூரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் மகேஷ் குமார் நடராஜன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜாக்பாட் வென்றுள்ளார்.
இதன் மூலம் அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5.5 லட்சம் தொகை (இந்திய மதிப்பின் படி) வழங்கப்பட இருக்கிறது.
49 வயதான நடராஜன் எமிரேட்ஸ் டிராவின் ஃபாஸ்ட் 5 பம்ப்பர் பரிசை வென்று இருக்கிறார்.
இதில் அவருக்கு ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் DH (மாதம் ரூ. 5.6 லட்சம்) தொகை 25 ஆண்டுகளுக்கு பரிசு தொகையாக வழங்கப்பட இருக்கிறது.
கல்வியில் முதலீடு
ஐக்கிய அரபு அமரீகத்தை சாராத முதல் வெற்றியாளர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிஷ்டம் குறித்து நடராஜன் தெரிவிக்கையில், "வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்தித்து இருக்கிறேன். நான் கல்வி கற்கும் போது எனக்கு பலர் உதவி செய்திருக்கின்றனர்.

தற்போது சமூகத்திற்கு எனது பங்களிப்பை வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. சமூகத்தில் தேவையானோருக்கு என் சார்பில் நிச்சயம் உதவிகளை செய்வேன்." என தெரிவித்துள்ளார்.
மேலும், பரிசு தொகையை எனது மகள்களின் கல்வியில் முதலீடு செய்யவும், குடும்பத்தாரின் எதிர்காலத்தை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்," என்றும் அவர் தெரிவித்தார்.