துபாயில் விழுந்து நொறுங்கிய இந்திய விமானம்!
துபாயில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து சம்பவம் இன்று (21) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த இந்தியாவின் தேஜஸ் போர் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமான கண்காட்சி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், துபாயில் விமான கண்காட்சி நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் விபத்துக்குள்ளான குறித்த விமானமும் பங்கேற்றுள்ளது.
இதன்போது, குறித்த விமானம் வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியுள்ளது.
கண்டறிய விசாரணை
இந்தநிலையில், போர் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.

அத்தோடு, விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.
மேலும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்