இந்திய சுற்றுலா பயணிகளுக்கு அரிய வாய்ப்பு: பிரான்ஸ் மேற்கொண்டுள்ள மாற்றம்
பிரான்சிலுள்ள ஈபிள் கோபுரத்தைக் காணச் செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு கட்டணம் செலுத்தும் முறை இலகுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஈபிள் கோபுரத்தைக் காணச் செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகள் இனி UPI மூலம் இந்திய பணமான ரூபாயிலேயே கட்டணம் செலுத்த முடியும்.
பிரான்ஸ் அதிபர், இமானுவல் மேக்ரான், இந்தியாவின் 75ஆவது குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களுக்காக இந்தியா சென்றிருந்த போது UPI பயன்பாட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளித்துள்ளார்.
முன்பதிவு
இந்நிலையில், பிரான்சிலுள்ள ஈபிள் கோபுரத்தைக் காணச் செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகள், UPI பயன்பாட்டைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட இணையதளத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஈபிள் கோபுரத்தைக் காண்பதற்கான பற்றுச்சீட்டுக்களை எளிதாக முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
அதேவேளை, இந்திய சுற்றுலாப்பயணிகள் ஈபிள் கோபுரத்தைக் காண அதிக அளவில் செல்லும் வெளிநாட்டவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |