தீவகப் பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறல்
Indian fishermen
Sri Lanka
Sri Lanka Fisherman
By Vanan
நெடுந்தீவு, அனலைதீவு போன்ற யாழ் மாவட்டத்தின் தீவகப் பகுதிகளில் நேற்று (17) இரவு நூற்றுக்கணக்கான இந்திய இழுவை மடிப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு மீன்பிடிக்கச் சென்ற அப்பகுதி கடற்றொழிலாளர்கள் இந்திய இழுவை மடிப் படகுகளை கண்டதும் தொழில் ஈடுபடாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தடுத்துநிறுத்த கோரிக்கை
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய இதனைத் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக் கடற்படையினர், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் ஆகியோர் வடபகுதி கடலுக்குள் அத்துமீறி இந்திய இழுவைப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி