கமலா ஹாரிஸ் வெற்றிபெற தமிழக கிராமமொன்றில் நடைபெறும் யாகம்
அமெரிக்க (us)ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் (kamala harris)வெற்றிக்காக அமெரிக்காவின் வோஷிங்டனில் இருந்து 13,000 கி.மீ தொலைவில் உள்ள தென்னிந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள இந்து கோவிலில் யாகம் நடைபெற்றுள்ளது.
60 வயதான கமலா ஹாரிஸ் இந்திய(india) மற்றும் ஜமைக்கா(Jamaica) வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண். கமலா தேவி ஹாரிஸ் அக்டோபர் 20, 1964 அன்று கலிபோர்னியாவின் ஒக்லாந்தில் பிறந்தார்.
கமலாவின் பெற்றோர்
கமலாவின் தாயார் ஷியாமளா கோபாலன் புற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருந்தார். கமலாவின் தந்தை டொனால்ட் ஹாரிஸ், பொருளாதார நிபுணர். அவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்.
தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவாரூர் மாவட்டம் துலையேந்திரபுரம் கிராமத்தில் உள்ள ஒரு இந்து கோவில் கமலாவின் வெற்றியை கொண்டாடுகிறது.
கமலா அம்மாவின் சொந்த ஊர்
இது கமலா அம்மாவின் சொந்த ஊர். கமலாவின் தாயாரின் உறவினர்கள் இன்றும் இந்த கிராமத்தில் வசிக்கின்றனர்.
இதேவேளை இன்று நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டடியிடுகின்றனர்.
இவர்கள் இருவருக்குமான வெற்றிவாய்ப்பு சம அளவிலேயே உள்ளதாக வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
images-news.abplive.com
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |