ரஷ்ய போரில் ஏவுகணை தாக்குதலில் இந்தியர் பலி
ரஷ்ய இராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர் ஒருவர் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக அழைத்து செல்லப்பட்டு இந்தியர்கள் சிலரை அந்நாட்டு இராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, குஜராத்தை சேர்ந்த ஹெமில் என்ற இந்தியர்,ரஷ்யா இராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
ஏவுகணை தாக்குதல்
இந்நிலையில், போரின் போது ஏவுகணை தாக்குதலில் ஹெமில் பலியாகி விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, போரில் உயிரிழந்த ஹெமில் உடலை மீட்டு கொண்டு வர வேண்டும் என்று அவரது தந்தை அஸ்வின் இந்திய தூதரகத்துக்கு பல முறை மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், சமீபத்தில் ரஷ்யா இராணுவத்தில் பணிபுரிந்த ஐதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்பான் (30) போரில் பலியானாமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |