கொழும்பில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் : என்ன செய்தார்கள் தெரியுமா..!
இலங்கையில் தங்குவதற்காக வெறும் வருகை விசா (visit visa)வில் வருகை தந்து கொழும்பு 7 இல் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை சட்டவிரோதமாக நடத்தி வந்த இந்திய பிரஜைகள் குழுவொன்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கைது செய்துள்ளது.
விசாரணையைத் தொடர்ந்து திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கறுவாத்தோட்டத்தில் உள்ள வீடொன்றை சோதனை செய்து முப்பது வயதுடைய ஏழு ஆண்களையும் ஒரு பெண்ணையும் அழைத்துச் சென்றனர்.
விசிட் விசாவில் நாட்டிற்கு வந்து
அனைத்து வெளிநாட்டவர்களும் விசிட் விசாவில் நாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர்களில் இருவர் 14 நாட்கள் விசா காலத்தை தாண்டியிருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பெண் மற்ற ஏழு சந்தேக நபர்களில் ஒருவரின் மனைவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் கறுவாத்தோட்டத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தமது தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை முன்னெடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாடு கடத்துவதற்கான ஆவணங்களை
குடிவரவு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட குழுவை நாடு கடத்துவதற்கான ஆவணங்களை விமான டிக்கெட்டுகளுடன் தயார் செய்தவுடன் அவர்களை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் குடியேற்ற சட்டத்தின்படி, விசிட் விசாவின் கீழ் எந்த வகையான வேலையிலும் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |