மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Mahinda Rajapaksa
High Commission of India Colombo
Birthday
By Sumithiran
இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இன்று (18) தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தூதர் ஜெனரல் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்று, இந்திய உயர் ஸ்தானிகரின் வாழ்த்துக்களைத் மகிந்த ராஜபக்சவுக்குத் தெரிவித்தார்.
மகிந்தவின் மனமார்ந்த நன்றி
"ராஜதந்திர ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் எங்களிடையே நிலவும் நட்பை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து, எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மகிந்த ராஜபக்ச சமூக ஊடகங்களில் வாழ்த்து தொடர்பாக ஒரு பதிவில் தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ச இன்று தனது 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 5 நாட்கள் முன்
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது!
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி