தமிழர் தாயகத்தில் மறைமுக சிங்கள குடியேற்றம் - கிளர்ந்தெழுந்த தமிழ் எம்.பிக்கள்

northern province indirect sinhala immigration
By Vanan Oct 24, 2021 08:00 AM GMT
Report

தமிழர் தாயகத்தில் மறைமுக நிகழ்ச்சித் திட்டங்களூடாக முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றங்களை உடன் நிறுத்துமாறு தமிழ் தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நீர்ப்பாசன அமைச்சரும் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றினையும் அவர்கள் அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''அரச தலைவரின் கிராமத்தினுடனான மக்கள் சந்திப்பு எனும் தொனிப்பொருளில் கடந்த 03.04.2021 இல் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள " போகஸ்வெல" என தற்போது பெயர் மாற்றம் பெற்றுள்ள கொச்சியான் குளம் என்ற தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்தில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. 

இதன்போது அப்போதைய வவுனியா மாவட்டச் செயலாளர் சமன் பந்துலசேனவின் வேண்டுகோளின் பிரகாரம் வடமத்திய மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட கெப்பிட்டிகொலாவ பிரதேச செயலாளர் பிரிவின் கனுகாவெல கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 600 குடும்பங்களும், பதவியா கிராம அலுவலர் பிரிவு மற்றும் கம்பிலிவெலலெதகன்ன கிராமங்களைச் சேர்ந்த 430 குடும்பங்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவுடன் இணைப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அண்மையில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு, வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்த சமன் பந்துலசேனவின் இக்கோரிக்கை முன்மொழிவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு - வடமத்திய மாகாணங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றி அமைத்து, அதனால் அப்பிரதேசத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்ற செயற்பாடாக இது திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு முரணாகவும் இன நல்லிணக்கத்தை பாதிக்கின்ற செயலாகவும் இது அமையும் என்பதால், இந்நடவடிக்கையை உடன் நிறுத்தும்படி வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் கோரிக்கை விடுப்பதோடு, இவ்வாறான செயல்முறைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறான மறைமுக நிகழ்ச்சித் திட்டங்களூடாக முன்னெடுக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்களே இந்நாட்டில் 30 வருடங்களுக்கு மேல் நடந்த யுத்தத்திற்கு வித்திட்டதுடன், இன நல்லுறவை பாதிக்கும் விடயமாக அமைந்தது என்பதையும் நினைவுபடுத்துகிறோம் - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025