இந்தோனேசிய நிலநடுக்க பலிகள் 500 ஐ அண்மிக்கும் அச்சம் -150 க்கு மேற்பட்டவர்களை காணவில்லை
இந்தோனேசியாவின் ஜாவா பிராந்தியத்தில் நேற்று இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 500 ஐ அண்மிக்கும் என அஞ்சப்படுகிறது.
பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 270 ஐ தாண்டியுள்ளது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் 150 க்கு மேற்பட்டவர்களை காணவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜாவாவை மட்டுமல்ல தலைநகர் ஜகார்த்தாவையும் ஒரு உலுக்கு உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலநடுக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், மேலும் 151 பேரைக் காணவில்லை அறிவிக்கபட்டுள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை 500 ஐ அண்மிக்கும் என அஞ்சப்படுகிறது.
மாணவர்கள் பலியான துன்பியல்
மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் பகுதியில் நேற்று பிற்பகல் 1:21 அளவில் இந்த அவலம் ஏற்பட்டபோது பாடசாலைகளில் மாணவர்கள் இருந்ததால் பல மாணவர்கள் பலியான துன்பியல் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் 22,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் 58,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா
