இலங்கையில் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட சிறுவர்களுக்கு பாதிப்பா?
corona
sri lanka
people
Dr. Ranjith Batuwanthudawa
By Shalini
இலங்கையில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட சிறுவர்களுக்கு, இதுவரையிலும் எந்தவித கடுமையான பாதிப்புக்களும் இல்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவன்துடாவ (Dr. Ranjith Batuwanthudawa) தெரிவித்தார்.
இதுவரையிலும், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 340,000 இற்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட, நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 20,000 இற்கும் அதிகமான சிறுவர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றிருக்கின்றார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.