கம்பகாவில் கொரோனா உச்சம் - பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் தொற்று
covid
public health inspectors
gamphaga
By Sumithiran
கம்பகா மாவட்டத்தில் கொரோனா தொற்று உச்சம் பெற்றுள்ள நிலையில் அந்த மாவட்டத்தில் பணிபுரியும் ஆறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.ஏ.யு.டி. குலதிலக தெரிவித்துள்ளார்.
கம்பஹா, ஜா-எல, பியகம, மஹர, வத்தல மற்றும் திவுலபிட்டிய ஆகிய இடங்களில் உள்ள சுகாதார மருத்துவ அலுவலர்களின் அலுவலகங்களில் இணைக்கப்பட்ட ஆறு பொது சுகாதார பரிசோதகர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அவர்களுடன் நெருங்கிப் பழகிய பொது சுகாதார பரிசோதகர்களின் மற்றொரு குழு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி