நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்த பணவீக்கம்
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த விலைச் சுட்டெண்படி, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 4.2 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.8 சதவீதமாக பதிவாகியிருந்தது.
வற் வரி அதிகரிப்பு
அதேவேளை, 2023 நவம்பரில் -2.2 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் டிசம்பரில் 1.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தற்போது வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
இதற்கமைய இந்த மாதத்திற்கான பணவீக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு
நாளாந்தம் உணவு மற்றும் உணவல்லா பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பொது மக்கள் தமது அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |