இலங்கையின் பணவீக்கம் பாரிய அளவு அதிகரிப்பு

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Vanan Jul 21, 2022 07:07 PM GMT
Report

இலங்கையின் முதன்மைப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 58.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டு, அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மேயின் 45.3 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 58.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா ஆகிய இரு வகைகளினதும் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது.

உணவுப் பணவீக்கம்

இலங்கையின் பணவீக்கம் பாரிய அளவு அதிகரிப்பு | Sri Lanka Inflation Increases In June

அதற்கமைய, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் 58.0 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 75.8 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் 34.2 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 43.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 யூனில் 10.91 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இதற்கு, முறையே 7.25 சதவீதத்தினையும் 3.66 சதவீதத்தினையும் கொண்ட உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.

அதற்கமைய, உணவு வகையினுள் மாதகாலப்பகுதியில் அரிசி, காய்கறிகள், உடன் மீன், சீனி, பால்மா, மற்றும் கருவாடு என்பவற்றின் விலைகளில் அதிகரிப்புக்கள் பதிவாகின.

மேலும், உணவல்லா வகையினுள் மாதகாலப்பகுதியில் போக்குவரத்து (பெற்றோல், டீசல் மற்றும் பேருந்துக் கட்டணம்), தளபாடங்கள், வீட்டலகுச் சாதனங்கள், வழமையான வீட்டுப் பேணல் மற்றும் சிற்றுண்டிச்சாலை மற்றும் சுற்றுலாவிடுதி போன்ற துணை வகைகளில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.

ஆண்டுச் சராசரி பணவீக்கம்

இலங்கையின் பணவீக்கம் பாரிய அளவு அதிகரிப்பு | Sri Lanka Inflation Increases In June

அதேவேளை, ஆண்டுச் சராசரி பணவீக்கம் 2022 மேயின் 16.3 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 20.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் 37.7 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 49.3 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம், 2022 மேயின் 13.0 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 16.8 சதவீதத்திற்கு அதிகரித்தது” என்றுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026