குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் நோய் : விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இலங்கையில் (Sri Lanka) இந்த நாட்களில் குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) நோய் அறிகுறிகள் தென்படுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா (Dr. Perera) இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இதற்கான அறிகுறிகள் தெனபட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும் எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு
இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) என்பது வைரஸ்களால் ஏற்படும் கடுமையான சுவாச தொற்று ஆகும். உலகின் அனைத்து பகுதிகளிலும் இது பொதுவானது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்தின் படி, பெரும்பாலான மக்கள் சிகிச்சையின்றி குணமடைகிறார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் இருமல் அல்லது தும்மலின் போது காய்ச்சல் எளிதில் பரவுகின்றதாகவும் காய்ச்சல், இருமல், தொண்டைப் புண், உடல்வலி மற்றும் சோர்வு ஆகியவை இன்ஃப்ளூயன்ஸாவின் அறிகுறிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |