அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அநுரவிற்கு ரணில் சவால்
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தான் அளித்த வாக்குறுதியின்படி அரசாங்க ஊழியர்களுக்கு வழங்குவதற்கு இணங்கிய சம்பள அதிகரிப்பு அல்லது மேலதிக சம்பள உயர்வை தமது அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் மாத்தறை மாவட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தார்மீக உரிமை அநுரவிற்கு இல்லை
அரசாங்க ஊழியர்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக பதவியேற்ற அநுர தனது வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. எனவே, மீண்டும் தேர்தலை கோரும் தார்மீக உரிமை அவருக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டில் இருந்து ஓய்வெடுங்கள்
இதேவேளை உங்களை மக்கள் நிராகரித்து விட்டார்கள், நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள். எனவே, வீட்டில் இருந்து ஓய்வெடுங்கள். தேர்தலில் தோல்வி அடைந்தால் வீட்டில் இருக்க வேண்டும்.
அதைவிடுத்து மீண்டும் அரசியலுக்கு வந்து நகைச்சுவையாளராக மாற வேண்டாம் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ரணில் விக்ரமசிங்கவிற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |