வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களா? சவேந்திர சில்வா வெளியிட்ட தகவல்
வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்போருக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரத்தில் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகை தரவேண்டும்.
அத்துடன் 12 - 19 வயதிற்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றுவதற்கான நடவடிக்கை நாட்டின் பல பகுதிகளில் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.