தென்கொரியாவில் குடியேறப்போவதாக வெளிவந்த தகவல்: முற்றிலும் நிராகரித்த மைத்திரி
தான் தென்கொரியாவில் குடியேறப்போவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் நேற்றையதினம்(27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை, “இந்த நாட்களில் நான் தென் கொரியாவுக்குச் செல்வதாகப் பல்வேறு ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகள் அதிகம் பரப்பப்படுகின்றன.
பொய்ப் பிரச்சாரம்
தென் கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டிற்கோ செல்ல எனக்கு எந்த அவசியமும் இல்லை.
அரசியல் களின் இத்தகைய பொய்ப் பிரச்சாரத்தை நான் வன்மையாக நிராகரிக்கிறேன்.
நீதிமன்றத்திடமிருந்து எனக்கு தடையுத்தரவு உள்ளதால், கம்பஹா மாநகர சபை மைதானத்தில் உலக தொழிலாளர் தினத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளனர்” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |